தமிழக கலாச்சாரம் குறித்து வார விழா
சென்னை:
தமிழக கலாச்சாரம் குறிதத வார விழா தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
மாணவர்களிடையேயும், பொது மக்களிடையேயும் நமது கலாச்சாரத்தின் பெருமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பற்றி பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்.
யுனெஸகோவின் உலக மரபுக் கழகத்தின் பரிந்துரையின் படி இந்திய தொல்பொருள் ஆய்வகம் இந்த விழாவை நடத்துகிறது.நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவின் போது மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக வானொலிநிகழ்சிகளும், புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளன.
உலக அளவில் கலாச்சார பெருமையை விளக்கும் நினைவுச் சின்னங்களாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட இடங்களில் 630இடங்கள் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்தும் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.இவை மாமல்லபுரத்திலும், தஞ்சாவூரிலும் அமைந்துள்ளன.
இது குறித்து சென்னை தொல் பொருள் ஆராய்சிக்கழக முதன்மை கண்காணிப்பாளர் நரசிம்மன் தெரிவிக்கையில், எங்கள் பணிகலாச்சார நினைவுச் சின்னங்களை பராமரிப்பதுதான். பல இடங்களில் நாங்கள் தேவையான வசதிகள் செய்யவில்லை எனபுகார்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலன இடங்களில் குடிநீர் வசதி, பூங்காக்களை எல்லாம் தொல் பொருள் ஆராய்சிக் கழகம்தான் பராமரித்து வருகிறது.
ஒவ்வொரு நினைவுச் சின்னத்தையும் பராமரிக்க ரூ 20,000 தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அதற்காக கொடுக்கப்படுவதுமிகக்குறைவான அளவு பணம்தான்.
தமிழக்கதில் மக்களுக்கு அடிக்கடி சிலைகள், வெண்கல பாத்திரங்கள் நிலங்களில் தோண்டும்போது கிடைக்கின்றன. ஆனால்அவர்கள் இது பற்றி அரசுக்கு தெரிவிப்பதில்லை, சென்னையில் இருக்கும் 4 தொல் பொருள் ஆராய்சி நிறுவனங்கள் கிராமம்கிராமமாக சென்று மக்களிடம் அவர்களுக்கு கிடைத்த பொருள்கள் பற்றியும் தொல் பொருள்ஆராய்சி கழகத்தின் செயல்பாடுகள்பற்றியும் விளக்கி வருகிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications