த.மா.கா.வின் சைக்கிள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பெட்லோரிய பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த பேரணி நடந்தது. த.மா.கா. தலைவர் மூப்பனார் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில், 2001-ல்தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் இந்த பேரணி அமைந்துள்ளது.
அடுத்த முதல்வர் மூப்பனார்தான். இதை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டு, கோட்டையில் த.மா.கா. ஆட்சி அமைய த.மா.கா.தொண்டர்கள் உறுதி எடுக்க வேண்டும் ன்றார்.
பேரணியில் நூற்றுக்கணக்கான த.மா.கா. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications