வீரப்பனைப் பிடிக்க புதிய திட்டம்
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க, தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை வீரர்கள் புதிய திட்டம் தீட்டியுள்ளதாகதெரிகிறது.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார், 108 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். தற்போது அதிரடிப்படைவீரப்பனை பிடிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் டெல்லியில் மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானியையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கர்நாடக உள்துறைச் செயலாளர் பிரகாஷ், டி.ஜி.பி. தினகர்ஆகியோர் சனிக்கிழமை சென்னை வந்தனர். சென்னையில் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், டி.ஜி.பி. ராஜகோபாலன்,கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை காலை 11 மணிக்கு துவங்கி நண்பகல் 12.45 மணி வரை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு கர்நாடக டி.ஜி.பி.தினகரும், டி.ஜி.பி. ராஜகோபாலனும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறுகையில், வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்நாங்கள் பழைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள இருக்கிறோம். புதிய அணுகுமுறை குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதிரடிப் படை செயல்பாடுகள் துவங்கிவிட்டன. மத்திய அரசிடமிருந்து அதி நவீன ஆயுதங்கள், படை உதவி உள்ளிட்டஅனைத்து உதவிகளும் கேட்டிருக்கிறோம்.
இரு மாநில அதிரடிப்படையுடன் ஒற்றுமையுடன் செயல் பட்டு வருகின்றன. ஐ.ஜி. பாலச்சந்திரன் தலைமையில் அதிரடிப்படைசெயல்படும். கர்நாடக டி.ஐ.ஜி. ஹர்ஷவர்த்தன ராஜூ அவருக்கு உதவியாக இருப்பார்.
மத்திய அரசிடமிருந்து உதவிகள் பெறுவதற்கும், புலனாய்வுத் துறைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. கர்நாடககாட்டிற்குள் வீரப்பன் நுழைந்து விட்டதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை.
மனித முயற்சியில் வீரப்பனை பிடிக்க எந்த காலக் கெடுவும் நிர்ணயித்து கூற முடியாது. வீரப்பனை பிடிக்கும் வரையும், காலக்கெடு என வைத்துக் கொள்ள வேண்டும். கிராம மக்கள் உதவியோடுதான் எங்கள் செயல்பாடு அமையும்.
நாங்கள் விவாதித்த அனைத்து விவரங்களையும் உங்களிடம் கூற முடியாது. மத்திய அரசிடம் என்ன கேட்டிருக்கிறோம் என்றமுழு விவரத்தைக் கூட நாங்கள் வெளியிட முடியாது என கூறினர்.
இந்நிலையில், தமிழக, கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதன் படி விரைவில் கமாண்டோ படையை வீரப்பனை பிடிக்கஅனுப்பி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வீரப்பனை பிடிக்க ராணுவத்தை அனுப்புமாறூ மத்திய அரசை தமிழக, கர்நாடக அரசுகள் மத்திய அரசுகள் கேட்டிருந்தன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் ராணுவம் அனுபப்படுவதில்லை. அதனால் கமாண்டோ படையை அனுப்ப மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
அதி நவீன கருவிகள், ஆயுதங்களும் கிடைக்க இருப்பதால் காட்டுக்குள் உள்ள அனைத்து வழிகளிலும் அதிரடிப் படையினரும்,மத்திய படைகளும் ஒரே சமயத்தில் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications