தமிழகத்தில் பிரபாகரன் பிறந்த நாள்
சென்னை:
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், சனிக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர்கள் மூலம்கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளில் பிரபாகரனை வாழ்த்தும் போஸ்டர்கள் பரவலாகக் காணப்பட்டன. நவம்பர் 25-ம் தேதி பிரபாகரன்பிறந்த நாள். இந்த நாளை, விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாளோடு, இதுவரை இறந்தவிடுதலைப் புலிகளின் நினைவு நாளாகவும் இதை புலிகள் அனுசரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, பிரபாகரன் பிறந்த நாள் "வழக்கமான உற்சாகத்துடன் புலிகள் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. சமீபத்திய ராஜ்குமார் கடத்தலின்போது, பிரபாகரன் பெயர்அடிபட்டது. வீரப்பனுக்கும், பிரபாகரனுக்கும் இடையே புதிய தொடர்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளநிலையில் பிரபாகரன் பிறந்த நாளை அவரது தமிழக ஆதரவாளர்கள், அமைதியாகவும், அதே சமயம், கொஞ்சம்வெளிப்படையாகவும் கொண்டாடினர்.
இதற்கிடையே, வீரப்பனை, தமிழகத்தின் நாகப்பட்டனம் மாவட்ட காடுகளில் நடமாட, தமிழக அரசு அனுமதித்திருப்பதாக,எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவான சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. வேதாரண்யம் காட்டுப் பகுதியில்வீரப்பன் பத்திரமாக இருப்பதாகவும் அந்த செய்திகளில் உள்ளன.
வேதாரண்யம், இலங்கைக்கு கடல் எல்லைக்கு அருகில் உள்ள நகரமாகும். எனவே வீரப்பனை, இலங்கைக்குத் தப்ப வைக்கதமிழக அரசு முயல்வதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications