"தீவிரவாதியாகி விட்டார் நெடுமாறன்
சென்னை:
தேசியவாதியாக இருந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தீவிரவாதியாக மாறி விட்டார் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்றக்கழகத் தலைவர் காமாட்சி நாயுடு ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்டங்களின் உயிர்நாடிப் பிரச்னையாகும். இப்பிரச்சனையில்மக்களுக்காக போராட வேண்டிய மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி மோகன் மெளனம் சாதிக்கிறார். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களும்மெளனம் சாதிக்கின்றனர்.
மாநிலத்திற்கு ஒரு கொள்கை, ஒரு நீதி என்று வேஷம் போடும் கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். இப்பிரச்சனை தொடர்பாகபேசுவதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநிலம் தழுவிய பந்த் நடத்துவதென கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.
தேசியவாதியாக இருந்த நெடுமாறன் தீவிரவாதியாக மாறியுள்ளார். அதிரடிப்படைக்கே சவால் விடும் அளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். அவரைதமிழக அரசு கைது செய்யாததற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
வீரப்பனிடம் நெடுமாறன் ஏதோ ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். இரண்டு மாநில அரசுகளும் அதனை மறைக்கின்றனர். அவர்களுக்குள் உள்ளஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தற்பொழுதுள்ள நவீன யுகத்தில் வீரப்பனைப் பிடிப்பது பெரிய காரியம் அல்ல. செயற்கைக்கோள், ராடார் என அதிநவீன கருவிகள் நமது ராணுவத்திடம்உள்ளது. அதை வைத்து வீரப்பனைப் பிடிக்க முடியும்.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தைஆதரிப்பவர்களை தமிழக அரசு ஏன் கைது செய்யவில்லை என்பதை விளக்க வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. தவறில்லாமல் தெளிவாகவாக்காளர் அடையாள அட்டை வழங்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது. இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்என்று தெரிவித்தார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications