அரசியல் ஆதாயம் தேட மாட்டேன் .. நெடுமாறன்
கோவை:
அரசியல் ஆதாயம் தேடும் வேலையில் இறங்க மாட்டோம், அது எங்கள் நோக்கம் அல்ல என கொளத்தூரில்நடந்த தமிழர் பேரவை மாநாட்டில், தமிழர் தேசியத் தலைவர் நெடுமாறன் பேசினார்.
மனித உரிமைக் கமிஷனைக் கண்டித்து கொளத்தூரில் நடந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நெடுமாறன்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பன் தொடர்பாக ஏற்பட்ட மனித உரிமை மீறல் பிரச்னையில், தலையிடாமல் தவிர்க்கும் போக்கினை மத்தியமனித உரிமைக் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. ராஜ்குமார் கடத்தலின்போது இந்த விவகாரத்தில் தலையிடகமிஷன் மறுத்து விட்டது.
இத்தகைய போக்கினைக் கண்டித்து இந்தியாவிலேயே முதல் முதலாக இங்கு தான் மாநாடு நடக்கிறது. இந்தமாநாட்டில் அரசியல் கலப்பு எதுவும் இல்லை. மனித உரிமை அக்கறை காரணமாகவே இந்த மாநாடுநடத்தப்படுகிறது. தமிழர் தேசிய இயக்கத்திற்கும் இந்த மாநாட்டிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அரசியல்ஆதாயம் தேட இது நடத்தப்படவில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தடா கைதிகளைச் சென்று பார்த்தோம். அங்கு எவ்வித விசாரணையும்இல்லாமல் ஏழரை ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண்களின் நிலையும் பரிதாபத்திற்குரியது.விசாரணை மேற்கொண்டு தண்டனை அளித்திருந்தால் கூட, ஏழு ஆண்டுகள் தான் இருந்திருக்கும்.
எனவே இப்பிரச்னையில் இரு மாநில அரசுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வழக்கை முடிக்க வேண்டும். பிரச்னைதொடர்பாக மீண்டும் மனித உரிமைக் கமிஷனை அணுகுவோம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. இப்பிரச்னையைமக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள கால தாமதம் ஏற்படுமானால், இப்பிரச்னையைக் கொண்டுஇயக்கமாக செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
சதாசிவா கமிஷன், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாகவே ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிஷன்தற்போது விசாரணையைத் துவக்கும் சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில் அதிரடிப்படையினரின் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாட்சி கூறும் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவேஅதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும்.
இப்போது அதிரடிப்படை உள்ளே இருப்பது, விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதற்குச் சமம்.
இதுவரை அதிரடிப்படைக்குச் செலவு செய்யப்பட்டுள்ள 170 கோடி ரூபாய்க்கு கணக்குத் தணிக்கை கிடையாது.இந்த கணக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தடா கைதிகளை விடுதலை செய்த பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிய பின்னர்,வீரப்பன் சரணடைவது குறித்து யோசனை செய்யலாம் என்றார்.
பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் நெடுமாறன் பேசியதாவது:
அதிரடிப்படையினரின் அத்து மீறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரு மாநில அரசுகளும் தலா 5 கோடிரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்துள்ளன. அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க அரசுகள் தகுந்தநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிரடிப்படையினரால் ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்.குற்றத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும். அதிரடிப்படை வீரர்களால்பாதிக்கப்பட்ட இரு மாநில மக்களுக்கும் நிவாரணம் வழங்க ஒரு பொதுவான இயக்கம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications