"உங்க ஐடி வேலையே வேண்டாம்!" டாக்சி ஓட்டி 2 மடங்கு அதிகம் காசு பார்க்கும் நபர்.. இது நல்லா இருக்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கை நிறைய வருமானத்தை அள்ளி தரும் ஐடி வேலையை விட்டு விட்டு ஒருவர் டாக்சி ஓட்ட ஆரம்பித்துள்ளாராம். இதன் மூலம் அவருக்கு வருமானம் இரட்டிப்பானதுடன் மனநிறைவும் கிடைப்பதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்த காலத்தில் பலரும் ஐடி வேலையை விட்டு விட்டு வேறு வேலைகளைச் செய்யவும் ஆசைப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் குருகிராமை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் டாக்ஸியில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவர் சற்றும் எதிர்பார்க்காதது.

IT taxi offbeat

இரண்டு மடங்கு வருமானம்

அவருக்கு டாக்ஸி டிரைவராக வந்தவர் ஐடி துறையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் வேலை செய்தவர். இருப்பினும், அந்த வேலையை விட்டுவிட்டு இப்போது முழு நேரமாக டாக்சி ஓட்டுகிறாராம். டாக்சி ஓட்ட ஆரம்பித்த பிறகு அவரது வருமானம் இரட்டிப்பாக உயர்ந்ததாகக் கூறியிருக்கிறார். அதை விட முக்கியமாக வாழ்க்கையில் அதிக சுதந்திரத்தையும் பெற்றதாகக் கூறினாராம்.

ஜயப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரான ஆகாஷ் குப்தா தான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டாக்சி ஓட்டுநருடன் நடந்த உரையாடலை அப்படியே பகிர்ந்துள்ளார். "இப்போது மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?" என்று ஆகாஷ் குப்தா கேட்டார். அதற்கு பதிலளித்த டிரைவர், "மாதம் ₹80,000 முதல் ₹90,000 வரை வருமானம் கிடைக்கிறது" என்று கூறினார். இந்த பதிலைக் கேட்ட ஆகாஷ் குப்தா ஆச்சரியமடைந்தார்.

ஐடி வேலை

பின்னர், "இதற்கு முன்பு என்ன வேலை பார்த்தீர்கள்?" என்று கேட்டபோது, அந்த டிரைவர் கூறிய பதில் தான் பெரிய ஷாக்! தான் ஐடி துறையில் பணியாற்றியதாகவும், அப்போது மாதம் சுமார் ₹40,000 சம்பளம் பெற்றதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் குப்தா, "நல்ல வேலை இருந்தபோதும் ஏன் அதை விட்டீர்கள்?" எனக் கேட்டுள்ளார்.

மனநிறைவு

அதற்கு அந்த டிரைவர், "நல்ல வேலை தான்.. ஆனால், சுதந்திரம் இல்லை. நேரக் கட்டுப்பாடு, மேனேஜர் கெடுபிடி மற்றும் ஒர்க் பிரஷர் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அது எதுவும் இல்லை. நான் எனக்கு பிடித்த வேலையைச் செய்கிறேன். கையில் வருமானமும் வருகிறது. மனநிறைவும் கிடைக்கிறது. ஐடி துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே இந்த முடிவை எடுத்தேன். இப்போது எனது மனைவி தனியாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஐடி வேலையை விட்ட பிறகே ஒர்க் லைப் பேலன்ஸ் சரியாக இருக்கிறது" என்று சொல்லியுள்ளார்.

இதை கேட்டு ஆகாஷ் குப்தா ஒரு நொடி வாய் அடைத்துப் போய்விட்டார். பிறகு டாக்ஸில் இருந்து இறக்கும்போது அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இறங்கியுள்ளார். இந்த காலத்தில் வேலை என்பது 9 டூ 5 என்பதில் இருந்து இதுபோல பல வழிகளில் மாறிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் நிலையில், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது.

நெட்டிசன்கள்

இதற்கு நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் அவரை பாராட்டி வருகிறார். ₹80,000 முதல் ₹90,000 வரை சம்பாதிப்பது எளிதான விஷயம் அல்ல என்று ஒருவர் பாராட்டியுள்ளார். மற்றொரு நபர், "சும்மா லீவ் கேட்டு யாரிடமோ கெஞ்சி கொண்டு இருப்பதற்குப் பதிலாக இதுபோல சுதந்திரமாக வேலை செய்வது மேல்" என பதிவிட்டுள்ளனர்.

அதேநேரம் இன்னும் சிலர் இதில் இருக்கும் சிக்கல்களையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒருவர், "₹80,000 வருமானம் கிடைத்தாலும் அதில் ₹20,000 பெட்ரோலுக்கு செலவாகும். வாகன பராமரிப்பு, வரி, காப்பீடு போன்ற செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் வண்டி ஓட்டுவதால் உடல் சோர்வும் அதிகம்" என்று பதிவிட்டார். மேலும், வேலை செய்தால் தான் வருமானம், ஐடியில் இருப்பது போல லீவ் எல்லாம் கிடைக்காது என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+