சென்னையில் புது வீடு வாங்கிய கமல் மகள்.. ஸ்ருதிஹாசன் போட்டோவில் ரசிகர்கள் கவனித்த விஷயம்! குவியுது வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா நடிகர்கள் நடிகைகள் புதியதாக வீடு வாங்கினால் போதும் பிரமாண்டமாக கிரகப்பிரவேசம், பிரபலங்களின் வருகை, விலை உயர்ந்த அலங்காரம் என்று அந்த நிகழ்ச்சியே பெரிய திருவிழா போல மாறிவிடும். ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் புது வீட்டு கிரகப்பிரவேச புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது அவருடைய வீட்டு புகைப்படம் மட்டுமல்ல அந்த விசேஷத்தை அவர் நடத்திய விதம் தான்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்று அடையாளம் ஸ்ருதி ஹாசனுக்கு இருந்தாலும் அவர் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தி தன்னை ஸ்பெஷல் என்று காட்டிக்கொண்டதே கிடையாது. ஸ்கூல் படிக்கும்போது கூட தான் கமல்ஹாசன் மகன் என்று சொன்னால் மற்ற மாணவர்களின் பார்வை வேறுவிதமாக இருக்கும் என்று தன்னுடைய அப்பா ஒரு டாக்டர், இன்ஜினியர் என்றெல்லாம் ஒவ்வொரு நேரமும் வேற வேற விஷயத்தை சொல்லி இருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் பேசியிருந்தார்.

Shruti Haasan Kamal Haasan New House Housewarming

ஸ்ருதிஹாசன் பேட்டி

ஸ்கூல் படிக்கும்போது மட்டுமல்ல சினிமாவில் வந்த பிறகும் தன்னுடைய அப்பா பெயரை பயன்படுத்தி எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதை விடவும், என்னுடைய திறமையால் நான் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லி இருக்கிறார். அதேபோல இப்போது ஸ்ருதிஹாசன் நடிகை மட்டும் இல்லாமல் பாடகியாகவும் இசை துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார்.

உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய நடிகை ஸ்ருதிஹாசன்.. கண்ணீருடன் பெற்றோர் சொன்ன வார்த்தை
இந்த நிலையில் தான் சென்னையில் புதிய வீடு வாங்கியிருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். வெளியாகியுள்ள கிரகப்பிரவேச புகைப்படங்கள் தான் ரசிகர்களை அதிகமாக பேச வைத்திருக்கிறது. பொதுவாக சின்னத்திரை நடிகைகளாக இருந்தாலும் சரி, சினிமா நடிகர்களாக இருந்தாலும் சரி இல்லை என்றால் சோசியல் மீடியா பிரபலங்களாக இருந்தாலும் சரி அவர்கள் கார் வாங்கினாலும், வீடு வாங்கினாலும் அதை பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள்.

Shruti Haasan Kamal Haasan New House Housewarming

புது வீடு வாங்கிய ஸ்ருதிஹாசன்

ஆனால் ஸ்ருதிஹாசன் அப்படி எதுவும் செய்யாமல் ரொம்பவும் எளிமையாக தன்னுடைய வீட்டில் சில நண்பர்கள் மட்டும் வைத்து எளிமையாக பூஜை செய்து அந்த வீட்டில் குடி புகுந்து இருக்கிறார். அதிலும் கழுத்தில் பூமாலை அணிந்து, கையில் தீபத்தை ஏந்திய படி பூஜை செய்யும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. வழக்கமாக ஸ்ருதிஹாசன் மார்டன் லுக் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வித்தியாசமான ஃபேஷனில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த கெட்டப் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்

அதுபோல இந்த போட்டோவில் இன்னொரு விஷயத்தையும் ரசிகர்கள் கவனத்தில் இருக்கின்றனர். அதாவது கமல்ஹாசன் அந்த புகைப்படங்களில் இல்லை. அதனால் கமல்ஹாசன் ஸ்ருதி வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வரவில்லையா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Shruti Haasan Kamal Haasan New House Housewarming

அது போல சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, தனக்கென சொந்த வீடு இல்லை என்று மும்பை மற்றும் ஹைதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பேசி இருந்தார். இப்போது சென்னையில் தனக்கான ஒரு வீட்டை வாங்கி அதில் முறைப்படி பூஜை செய்து குடியேறி இருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கறது.

பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் மகள் வீட்டு விசேஷம் வேற மாதிரி இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் இவ்வளவு சிம்பிளாக செய்கிறாரே என்று சிலர் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+