தனி மாநிலம் கேட்கிறார்கள் கொங்கு வேளாளர்கள்
சென்னை:
தமிழகத்தில் சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, நாமக்கல், தர்மபுரி, கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கொங்கு மாநிலம்என்று அறிவிக்க வேண்டும் என்று கொங்கு வேளாள கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:
கொங்கு வேளாளர் பேரவையின் மாநில மாநாடு, தர்மபுரியில் வரும் 2001 ம் ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி நடக்கவுள்ளது.
உத்தரப்பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்தது போல் தமிழகத்தையும் பிரிக்க வேண்டும். தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி,சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கொங்கு மாநிலம் என்ற புதிய மாநிலம் உருவாகவேண்டும்.
தமிழகத்தில் தென்னை மரங்களை சிலந்திப் பூச்சி தாக்கி வருகிறது. இதனால் தேங்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குநஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கொங்கு வேளாளர் இனத்தில் உள்ள 15 உள் பிரிவுகளை அரசு அங்கீகரித்துள்ளது. இதுதவிர மேலும் 15 உள் பிரிவுகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications