நான்தான் ஜனாதிபதி .. புஷ் பிரகடனம்
ஆஸ்டின்:
நான்தான் அடுத்த ஜனாதிபதி என்று குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூறியுள்ளார்.
புளோரிடா தேர்தல் அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரத்தில், ஜார்ஜ் புஷ்வெற்றி பெற்றதாக அறிவித்தது. இதையடுத்து தான்தான் அடுத்த அதிபர் என்று புஷ் கூறியுள்ளார்.அதிகார மாற்றத்திற்குத்தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் ஆஸ்டின் நகரிலுள்ள கவர்னர் மாளிகை முன்பு அவர் தொண்டர்களின்ஆரவாரத்திற்கு மத்தியில் அவர் பேசினார். அப்போது, அமெரிக்காவை ஒன்றிணைக்க பாடுபடுவேன். வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுள்ளன. முடிவை கோர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இதை நானும், துணை அதிபர் வேட்பாளருமான டிக் செனியும்மிகவும் கெளரவத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். அமெரிக்காவின் அடுத்த அதிபராகவும், துணை அதிபராகவும் செயல்படநாங்கள் தயாராகி வருகிறோம்.
நேரம் ஓடிவிட்டது. நிறைய வேலைகள் எங்களுக்குக் காத்திருக்கின்றன. அதிபர் கிளிண்டனின் நிர்வாகத்துட் பேசி அதிகாரமாற்றத்திற்கான வேலைகளைப் பார்க்குமாறு செனியைப் பணித்துள்ளேன். தலைநகர் வாஷிங்டனில் இதுதொடர்பானஅலுவலகத்தை உடனடியாக துவக்குமாறும் செனியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். சுமூகமான முறையில் இது நடைபெறவிரும்புகிறேன்.
தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக துணை அதிபர் கோரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இதை அவர்கள்தவிர்க்க வேண்டும். தயவு செய்து இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்புஷ்.
தனது ஆதரவாளர்களை, எளிமையான முறையில் வெற்றியைக் கொண்டாடும்படியும் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் அணியின் தலைவராக செனியை புஷ் நியமித்துள்ளார். ஆண்ட்ரூ கார்ட் என்பவரும்இந்தஅணியில் இடம் பெற்றுள்ளார்.இருவரும், புஷ்ஷின் தந்தையும், முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில்இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications