அனைத்துக் கட்சியினரும் கூடிய வைகோ வீட்டுத் திருமணம்
டெல்லி:
டெல்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகள் திருமண வரவேற்பு திங்கள்கிழமை மாலை நடந்தது.
திருமண வரவேற்பு டெல்லி அக்பர் ரோட்டிலுள்ள அரசு மாளிகையில் நடந்தது. வரவேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் வைகோவின் மகள் கண்ணகிக்கும், சிகாகோவில் என்ஜினியராகப் பணிபுரியும் ஜான் புஷ்பராஜூக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளும் வகையில் டெல்லியில் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடுசெய்திருந்தார் வைகோ.
விடுதலை ப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வரும் வைகோ வீட்டு திருமண வரவேற்பில், பலதலைவர்கள், வைகோவிடம் அரசியல் ரீதியாக உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து கலந்து கொண்டனர்.
துணை ஜனாதிபதி, பிரதமர்:
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் திருமணவரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும்பல மாநில முதல்வர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருமண வரவேற்பு காரணமாக அரசு மாளிகை நாதஸ்வர வாத்யத்துடன், மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. அரசியல்ரீதியாக குடுமிப்பிடி சண்டைபோட்டு வரும் பல கட்சித் தலைவர்களும் சண்டையை எல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications