நாளை லண்டனில் உலக அழகிப் போட்டி: வெல்வாரா பிரியங்கா
லண்டன்:
லண்டனில் 2000 மாவது ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
இப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 95 அழகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்கிறார்.
அழகிப் போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் கண்டு களிக்கவுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் அனைத்து நாடுகளிலிருந்து சிறந்த அழகிகளை தேர்ந்தெடுப்பதற்காக மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் ஆகிய போட்டிகள்நடத்தப்படுகின்றன.
இதில் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அழகிகள் மிஸ் யூனிவர்ஸ் அல்லது மிஸ் வேர்ல்டு பட்டத்தைப் பெறுவர்.
மிஸ் வேர்ல்டு:
இந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டி லண்டனில் உள்ள மில்லினியம் அரங்கில் வியாழக்கிழமை நடக்கிறது. அழகிப் போட்டிகள் தொடங்கி 50ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அழகிப் போட்டியைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பரவசத்தில் ரசிகர்கள்:
அழகிப் போட்டி இந்திய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டிற்கான மிஸ் வேர்ல்டு போட்டியில் பிரியங்காசோப்ரா, இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.
அவர் வென்று விட்டால், ஒரே ஆண்டில் மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாது முறையாக இந்தியர்கள்இடம் பெறுவர்.
இந்த ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்திய அழகி லாரா தத்தா ஏற்கனவே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, 94 ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை சுஷ்மிதா சென்னும், மிஸ் வேர்ல்டு பட்டத்தை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications