மர்மமான முறையில் 23 குதிரைகள் சாவு
சென்னை:
சென்னை ராணுவ முகாமில் உள்ள 23 குதிரைகள் மர்மமான முறையில் இறந்து போயின. இது குறித்து உயர் மட்ட குழுவினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
சென்னையில் உள்ள ராணுவ முகாமிலும், தேசிய மாணவர் படையிலும் கிங் பயிற்சி மையத்திலும் பல குதிரைகள் உள்ளன. குதிரை சவாரி பயிற்சிக்கு இந்தகுதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று நாட்களாக பெரும்பாலான குதிரைகள் திடீர் சுகவீனம் அடைந்தன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த குதிரைகள் திடீர் சுகவீனம்அடைந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு குதிரையாக இறந்தன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 23 குதிரைகள் இறந்துள்ளன.
இதைத் தொடர்ந்து இதர குதிரைகளுக்கு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது.
23 குதிரைகளும் எப்படி இறந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக்குழு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் குதிரைகள் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மமான முறையில் இறந்த குதிரைகள் பிரேத பரிசோதனைசெய்யப்பட்டன.
சில உடல் உறுப்புகள் எடுத்து சோதனைக்கும் உட் படுத்தப்பட்டுள்ளது.பரிசோதனைக் கூடத்தில் இருந்து வரும் அறிக்கையை வைத்தே காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.
குதிரைகளுக்கு வழங்கப்பட்ட புல்லில் ஏதாவது கலந்திருக்குமோ என்று கால்நடை அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே புல் சப்ளை செய்தவரிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடைப் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பராமறிப்புத் துறை ஆகியவை குதிரைகள் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணைமேற் கொண்டு வருகிறன்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications