வீரப்பனால் தப்பித்துச் செல்ல முடியாது: அதிரடிப்படை
சென்னை:
சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சந்தியமங்கலம் காட்டுப்பகுதியை விட்டு தப்பியிருக்க முடியாது என அதிரடிப் படையினர் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் 108 நாட்களுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின் வீரப்பனை பிடிக்கதமிழக, கர்நாடக அரசுகளின் அதிரடிப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் வீரப்பன் கேரளா வழியாக இலங்கைக்கு தப்பி சென்று விட்டதாக வதந்திகள் நிலவி வந்தன. இது குறித்து வீரப்பனால்கடத்திச் செல்லப்பட்ட காவல் துறை குழுவில் இருந்த ஒருவரை கேட்ட போது அவர் கூறியதாவது:
வீரப்பன் தப்பிச் செல்ல வாய்ப்புகள் கிடையாது ஏனென்றால் சத்தியமங்கலம் காடு மட்டும் தான் அடர்ந்த காடு. இங்குதான் காடுஅடர்த்தியாக இருப்பதால் மனிதர்கள் நடமாட்டம் தெரியாமல் மறைந்து வாழ முடியும்.
கர்நாடக, கேரள காடுகளில் சில இடங்கள் பரந்த நிலப்பரப்பாக இருக்கும். மேலும் சிலர் அங்கு குடிசைகள் அமைத்து வாழ்ந்தும்வருகிறார்கள். இதனால் வீரப்பன் அந்த வழியாக தப்பிச் சென்றிருக்க முடியாது.
வீரப்பனுக்கு உணவு கொண்டு செல்லும் பாதை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காட்டில் கிழங்குகள், பழங்கள் போன்றவைகிடைக்கும். அதனால் உணவுப் பொருள்கள் இல்லை என்பதால் பாதிப்பு ஏற்படாது.
வீரப்பனை பிடிப்பது குறித்து எடுக்கும் நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். ரேடியோ செய்திகள் கேட்கும் வழக்கம்உள்ள வீரப்பன் அதிரடிப்படை நடவடிக்கை குறித்து தெரிந்து கொண்டால் தன் மறைவிடத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
வீரப்பனை பிடிக்க முடியாது என்பதில்லை. தீவிர முயற்சி இருந்தால் வீரப்பனை பிடிக்க முடியும் என கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications