மீனவர்கள் மோதலில் 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே இரு குப்பங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் இருந்து வந்தமுன் விரோதம் வியாழக்கிழமை காலை பெரும் கலவரமாக வெடித்தது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். பெட்ரோல் குண்டுகளும்வீசப்பட்டன.

இந்த மோதலில் 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். ஏழு பேர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மோதல் நடந்த பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுவதால் போலீஸார் பெருமளவு அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே, கூனாங்குப்பம், அரவங்குப்பம் என்ற இரு குப்பங்களைச் சேர்ந்தமீனவர்களிடையே மீன் பிடிப்பதில் வெகுகாலமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இரு குப்பங்களையும் சேர்ந்த மீனவர்களும் கடலில் தங்களுக்குள் எல்லைகளை வரையறுத்துக் கொண்டு ஒருகுப்பத்தினரின் எல்லைக்குள் மற்றொரு குப்பத்தினர் மீன் பிடிக்க வரக் கூடாது என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால் பலமுறை இதை மீறி ஒருவரது எல்லைக்குள் மற்றொருவர் மீன் பிடிக்க சென்றதால் இரு குப்பங்களைச்சேர்ந்தவர்களுக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டிருக்கிறது.

அப்பொழுதெல்லாம் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொள்வார்கள்.

இந்த நிலையில் அரவங் குப்பத்தைச் சேர்ந்த அரசப்பட்டு என்பவரும் சீனிவாசன் என்பவரும் புதன்கிழமை காலைமீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அரவங் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் கூனாங்குப்பம் அருகேயுள்ள கடல் பகுதி வழியாகத் தான்செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

அரவங்குப்பம் மீனவர்களான அரசப்பட்டும், சீனிவாசனும் புதன்கிழமை காலை கூனாங்குப்பத்தை கடக்கும்பொழுது நடுக் கடலில் அவர்களது படகை கூனாங்குப்பம் மீனவர்கள் வழி மறித்தனர்.

எங்களது எல்லைக்குள் எப்படி நுழையலாம் என்று இருவரையும் தாக்கினார்கள் . இருவரும் பலத்த காயம்அடைந்தனர்.

இந்த விஷயம் அரவங்குப்பம் கிராமத்தினருக்கு தெரிய வர, ஆயுதங்களுடன் திரண்டனர். கூனாங்குப்பத்திற்குபடையெடுத்தனர். கிராமம் சூரையாடப்பட்டது.

தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்த கூனாங்குப்பத்தினர் பதில் தாக்குதல் கொடுக்க அரவங்குப்பத்தைச்சேர்ந்தவர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டனர்.

ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களும் சீரியஸான நிலையிலேயே இருக்கின்றனர். தொடர்ந்து பதட்டம்நிலவுகின்றது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+