மாணவிகளிடம் சில் மிஷம் செய்த பள்ளி நிர்வாகி
திருச்சி:
திருச்சியில் இருக்கும் புகழ் வாய்ந்த தனியார் பள்ளியின் நிர்வாகி அங்கு உள்ள ஆசிரியைகளிடமும்,மாணவிகளிடமும் சில்மிஷம் செய்து வந்ததால் கைது செய்யப்பட்டார். பள்ளியும் மூடப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் மல்லிகை புரத்தில் ஸ்ரீரங்கா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளிஸ்ரீமான் தாத்தாச்சாரியாருக்கு சொந்தமானது.
இப்பள்ளியை தாத்தாச்சாரியின் மகள் உஷா ரங்கநாதன் நிர்வாகித்து வந்தார். அவர் சென்னையில் இருப்பதால்இந்த பள்ளியை அவரது மகன் ஸ்ரீநிவாசன் நிர்வாகித்து வந்தார்.
இந்த பள்ளியில் 400 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 66 ஆசிரியைகளும், 10 ஆசிரியர்களும்பணி புரிந்து வருகிண்றனர்.
பள்ளியை நிர்வாகித்து வரும் ஸ்ரீநிவாசனும், பெரியசாமி என்பவரும் உணவு இடைவேளையின் போது அங்குபணிபுரியும் ஆசிரியைகளிடமும், படிக்கும் மாணவிகளிடமும் சில்மிஷம் செய்ததாகவும், முறை கேடாக நடந்துகொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடமும் ஸ்ரீநிவாசன் சில்மிஷம் செய்துள்ளார்.மாணவிகளை ஃபெயிலாக்கி விடுவேன் என மிரட்டி அவர்களிடம் தன் லீலைகளை தொடர்ந்திருக்கிறார்.
தன் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் வந்து பயிற்சி செய்யுமாறு மாணவிகளை தன் வீட்டிற்கு வரச் சொல்லி அதுமாதிரி வரும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்திருக்கிறார் ஸ்ரீநிவாசன்.
மாணவிகள் இது பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதும், மாணவிகளின் பெற்றோர் புருஷோத்தமன்,ராஜகோபாலன், மதன்லால், வெங்கடேஷன் ஆகியோர் தலைமையில் பள்ளிக்கு சென்று ஸ்ரீநிவாசனுக்கு எதிராககூச்சல் எழுப்பினர்.
போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் பள்ளி முதல்வர் வேம்புவை சந்தித்து பேசினர். இதனால் கோபமுற்றஸ்ரீநிவாசன் தன் அடியாட்களை ஏவி தென்னூரில் வசித்து வரும் வெங்கடேஷை தாக்கியதால் பிரச்சனைபெரிதாகியது.
பாமக போராட்டம்:
ஸ்ரீநிவாசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் தலைவர் கண்ணதாசன்தலைமையில் பெற்றோர்கள் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்திலிருந்து ஊர்வலமாக வந்து பள்ளியின் முன் கூடிஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாக்கப்பட்ட வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீநிவாசனை திருச்சி தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜ்குமார் கைது செய்தார்.
மாணவிகள், பெற்றோர்கள் கூடி ஆசிரியைகள், மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஸ்ரீநிவாசன் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி திருச்சி நகர டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் செய்ததால் ஸ்ரீரங்கம் ரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளிகாலவரையரையின்றி மூடப்பட்டது
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications