ஸ்டாலின் எப்போது மதுரை மேயரானார்?
மதுரை:
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள முதல் சுரங்க நடைபாதையை சென்னை மேயர் ஸ்டாலின் திறக்க எதிர்கட்சி கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் இது தொடர்பாக திமுகவினரோடு வாக்குவாதத்தில் இறங்கினர் . இதைத் தொடர்ந்துசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மாநகராட்சி கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்ற பொழுது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் அய்யாவு எழுந்து, டிசம்பர் 9-ம் தேதிசுரங்கப்பாதையை சென்னை மேயர் ஸ்டாலின் திறப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் திறப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் சென்னைக்குத்தான் மேயர், மதுரையில் அங்கம் வகிக்கும் யார் வேண்டுமானாலும்திறக்கலாம். ஸ்டாலின் திறக்க அனுமதிக்க முடியாது. இது தி.மு.க கட்சி விழா அல்ல, அரசு விழா என்றார்.
இதையடுத்து அ.தி.மு.க , த.மா.கா., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் ஸ்டாலின் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் எழுந்து ஸ்டாலின்தான் திறப்பார் என்று அடாவடியாகக் கூறினர். இதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும்கட்சி- எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக்கொண்டனர்.
இதையடுத்து மேயர் சபையில் ஆர்பாட்டம் செய்தவர்களை வெளியேற்ற காவலர்களுக்கு உத்திரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனையைக்கிளப்பிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகாலிங்கத்தை காவலாளிகள் வெளியேற்றினர்.
பின் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்தது.
தீடீரென பெண் கவுன்சிலர்கள் உட்பட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் சபைக்குள் மேயர் முன் உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மறியல் செய்யஆரம்பித்தனர்.
உடனே மேயர், அனைவரையும் வெளியேற்ற போலீஸாரை வரவழைத்தார். போலீஸார் வந்து அனைவரையும் வெளியேற்றும் படி கெஞ்சினார்.ஆனால், பெண் கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் மறுத்துவிட்டனர்.
இந் நிலையில் மாநகராட்சி காவலாளி பெரியசாமி அ.தி.மு.க உறுப்பினர் சரவணனை வெளியேற்ற முற்பட்ட பொழுது இருவருக்கும் தள்ளுமுள்ளுஏற்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேயர் இருக்கைக்கு முன் வந்து மோதும் சூழ்நிலை உருவானது.
எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சி அராஜகம் ஒழிக என்று சபைக்குள்ளேயே குரல் கொடுத்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, மேயர் அனைத்து தீர்மானங்களும் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், இந்தக் கூட்டம் இத்துடன் முடிவதாவும்கூறி வெளியேறினார்.
ஸ்டாலினை வைத்து சுரங்கப் பாதையை திறந்து தேர்தல் லாபம் அடிக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த தி.மு.க. தலைமைக்கு இந்த விஷயம் அதிர்ச்சிஅளித்துள்ளது. இத்தனை எதிர்ப்பையும் மீறி ஸ்டாலினை வைத்து சுரங்கப் பாதையை திறந்தால் எதிர்க் கட்சிகள் போர்ககோலம் பூண்டு போராட்டம்நடத்தும் என்பதால் தி.மு.க தலைமை சற்று அப்செட் ஆகிவிட்டது என்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தில்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications