கோப்புகளை பார்க்கத் தொடங்கினார் மாறன்
சென்னை:
பூரண குணமடைந்து விட்ட மத்திய தொழில்துறை அமைச்சர் மாறன் புதன்கிழமை இரவே அலுவலகக்கோப்புக்களைப் பார்க்கத் தொடங்கி விட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைமை டாக்டர் ரெட்டிதெரிவித்தார்.
மாறன் உடல்நிலை குறித்து டாக்டர் ரெட்டி கூறுகையில், மத்திய அமைச்சர் மாறன் முற்றிலும் குணமடைந்துவிட்டார்.
அவர் புதன்கிழமை இரவே மருத்துவமனையில் வைத்து அலுவலகக் கோப்புக்களைப் பார்த்தார். இன்னும் 15லிருந்து 20 நாட்களுக்குள் அவர் அலுவலக வேலைகளை வழக்கம் போல் கவனிப்பார் என்றார்.
மற்றொரு டாக்டர் கோபால் கூறுகையில், அப்பல்லோ மருத்துவ மனையிலிருந்து திரும்பு முன் முரசொலி மாறன்டெல்லியிலுள்ள சில அமைச்சர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நலமாக இருப்பதாக கூறினார்என்றார்.
ஒற்றைத் தலைவலியால் அப்பல்லோவில் அனுமதி:
முன்னதாக, அக்டோபர் 28 ம் தேதி அமைச்சர் மாறன் ஒற்றைத் தலைவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நவம்பர் 7 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் இருதயக் கோளாரால் பாதிக்கப்பட்டிருந்துபரிசோதனையில் தெரிய வந்தது.
முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் மாறனை நேரில் சென்று சந்தித்தனர். முதல்வர் இரவுமுழுவதும் மருத்துவ மனையிலேயே தங்கி மாறனைக் கவனித்துக் கொண்டார்.
செப்டல் அப்லேஷன்:
அப்பல்லோ மருத்துவமனையில் மாறனுக்கு செப்டல் ஆப்லேஷன் முறைப்படி சிகிச்சையளிக்கப்பட்டது. ஜெர்மன்மற்றும் லண்டனிலிருந்து டாக்டர்கள் சென்னைக்கு வந்து மாறனைப் பரிசோதித்தனர். அவர்களும் மாறனுக்குசிகிச்சையளித்தனர். இதற்குப்பின் தற்போது உடல்நிலை நன்கு தேறி விட்டார் மாறன்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications