இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைகிறது
டெல்லி:
இந்தியாவில் படித்த மக்களிடையே வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது எனபாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சத்ய நாராயண் ஜாதியாநாடாளுமன்றத்தில் கூறியதாவது:
1987-88-ம் ஆண்டை விட 1993-94-ம் ஆண்டில் படித்தவர்களிடையே வேலைஇல்லா திண்டாட்டம் குறைந்துள்ளது என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
1999-2000-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அரசுக்கு இன்னும்கிடைக்கவில்லை. 1997-ம் ஆண்டு வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை 80 லட்சம்என்ற அளவில் இருந்தது. ஆனால் அதில் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள்எண்ணிக்கை என்ன என்பது தெரியவில்லை.
தொழிலாளர்களுக்கான இரண்டாவது தேசிய குழு ஒன்றை அரசு கடந்த ஆண்டுஅமைத்துள்ளது. தொழிலாளர்களுக்கான சட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்து அதைபுதிய பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்காக அந்த குழுஅமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
