வீடுகளுக்கு அருகே மதுக்கடை: கொந்தளிப்பில் மக்கள்
சென்னை திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள காந்தி தெருவில் மதுபானக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
திருவான்மியூரில் இந்திராநகர் 29-வது குறுக்குத்தெரு அருகே பெரியார் நகர் உள்ளது. இதன் அருகில் வள்ளூவர்நகர், மற்றும்குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியில் வசிக்கின்றனர்.
பெரியார் நகரில் காந்தி தெரு உள்ளது. இந்த தெருவில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முழுக்க,முழுக்க குடியிருப்புப் பகுதியான இங்கு மதுபானக்கடை திறப்பு குறித்து மக்களுக்கு தெரியவந்தது.
மதுபானக்கடை திறக்கும் இடத்தின் எதிரில் திருவள்ளூவர் தமிழ்வழி கூடம் என்று ஒரு பள்ளியும், சத்துணவுக்கூடமும் உள்ளன.இப்பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்றும் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி சிறிய அளவில் பிரச்சனை ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில் இங்கு மதுபானக்கடை திறக்கப்படுகிறது என்கிற செய்தி பரவிய உடன் அங்குள்ள பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் வள்ளூவர் நகர் பொது நலச்சங்கத்தின் தலைவர்கே.எம்.லட்சுமணன் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.
பெரியார் நகர் பொதுநலச் சங்கத்தின் தலைவர் ஆறுமுகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அரசிடமும், போலீஸாரிடம் உரிய முறையில் மனு கொடுத்தும் தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று பொதுமக்கள்அதிருப்தியில் உள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அங்கு மதுபானக்கடை திறக்கும் நிலை உள்ளதால் நேற்றுஅந்தப்பகுதியில் உள்ள பெண்கள் திரண்டனர்.
சாலை மறியலில் ஈடுபடுவது என்றும் அவர்கள் முடிவெடுத்தனர். குடியிருப்புப் பகுதியான இங்கு மதுபானக்கடையைதிறக்கக்கூடாது என்றும் இதனால் பொது அமைதி கெடும் என்றும் எனவே இந்தப் பிரச்சனையில் முதல்வரே நேரடியாகதலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications