அரசுக் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கல்வி அறிமுகம்
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை முதல் கணினிக் கல்விஅறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகள் அனைத்திலும் கணினிக் கல்வியை அறிமுகம்செய்துள்ள முதல் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதுள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு கணினிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.தனியார் கணினி பயிற்சி மையங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுவருகிறது. தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினிக்கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் துவக்கவிழா சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. முதல்வர்கருணாநிதி இத் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கணினிக் கல்விவழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுடன் மூன்று தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றன.என்.ஐ.ஐ.டி நிறுவனம் 48 கல்லூரிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்திலேயே அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 25 ஆயிரத்து 178 மாணவர்கள்சேர்ந்துள்ளனர். பயிற்சிக் கட்டணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை மாணவ,மாணவியர் நான்கு தவணையாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஆண்டுக்குஆறு கோடி ரூபாய் வழங்குகின்றது.
இந்த தொகை மாணவர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதால் அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லாதவண்ணம் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications