29 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த விவாகரத்து ஜோடி

Subscribe to Oneindia Tamil

காட்மாண்டு:

நேபாளத்தில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இதையடுத்துஅவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்று முடிவெடுத்ததாகத்தெரிவித்தனர்.

நேபாளத்தில் கைலாலி மாவட்டம் சியாமளா கிராமத்தில் வசித்து வருபவர் நபால் சிங் சாத். வயது 80. இவரது மனைவி பெயர் சாருதேவி. வயது 65. இவர்கள் இருவரும் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் 1971 ம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துசெய்து கொண்டனர்.

வயதான காலத்தில் தாங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் என்ன என்று யோசித்தனர். அதன்படி இவர்கள் இருவரும்வெள்ளிக்கிழமை மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் அவர்களது சொந்த கிராமத்தில் நடந்தது.

முதலில், விவாகரத்து ஆனவுடன் சாரு தேவி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது கணவர் சமீபத்தில்இறந்தார். இதையடுத்து அவர் தான் விவாகரத்து செய்த முதல் கணவரையே மீண்டும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தார்.

நபால் சிங் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவேயில்லை. மீண்டும் திருமணம் செய்து கொண்டது குறித்து இவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் நாங்கள் முன்பை விட தற்போது இன்னும் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+