உதகையில் 5 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
உதகமண்டலம்:
பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் சிங்காரா பகுதியில் சுரங்கத்தில் பணி புரிந்து வந்த 5 பேர் 300 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து இறந்தனர்.
பைகாரா இறுதி நீர் மின் திட்டப் பணிகள் ரூ 386 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முடிக்கப்பட வேண்டும் என்பதால்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன
புதன்கிழமை இரவு கட்டுமானப் பொருட்களை விஞ்ச் மூலம் 600 மீட்டர் உயத்திலிருந்து தாழ்வான பகுதிக்கு 5 பணியாளர்கள் எடுத்து வந்தனர். வலுவானஇரும்பு கயிற்றால் இயக்கப்படும் இந்த விஞ்ச் 300 மீட்டர் உயரம் வந்த போது தீடீரென அறுந்து விழுந்தது.
கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த 5 பேரும் செங்குத்தான குகையிலிருந்து கீழே விழுந்தனர். இவர்கள் குகையின் 4 பகுதிகளில் உள்ள பாறைகளிலும்மோதி உடல் சின்னபின்னமாகி இறந்தனர்.
இந்த விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தஸ்தகரி (19), பீகாரைச் சேர்ந்த லோலன்ராம் (30), உபேந்திரா ராவ் (25), தர்ம விஜி (22), உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ப்ரீத் (20) ஆகியோர் உயிரிழந்தனர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ச் பாதையில் பணி செய்து கொண்டிருந்த பீகாரைச் சேர்ந்த அனுஜ் குமார்சிங் (26) என்பவர் இரும்புக் கயிறு மோதியதால் காயமடைந்தார். இவர் தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications