காட்டில் தற்கொலை செய்ய நினைத்தேன்: ராஜ்குமார்
பெங்களூர்:
வீரப்பன் என்னைப் பிடித்து வைத்திருந்த போது நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன் என்று நடிகர் ராஜ்குமார் அகில இந்தியவானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த நவம்பர் 16 ம் தேதி வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவித்தார். இவர் வியாழக்கிழமை பெங்களூர் வானொலி நிலையத்துக்குப் பேட்டியளித்தார்.
இந்தப் பேட்டி ஆ நூறென்ட்டு தினங்களு என்ற பெயரில் ஒளி பரப்பப்பட்டது. இந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை 30 ம் தேதி நான் வீரப்பனால் கடத்தப்பட்டேன். வீரப்பன் பிடியில் இருந்த போது நான் மிகவும் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.அங்கிருந்த உயரமான குன்றுகளிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
யானையைப் பார்க்க ஆசை:
மேலும் நான் காட்டில் யானையைப் பார்க்க விரும்பினேன். ஆனால் வீரப்பனோ அல்லது அவரது கூட்டாளிகளோ எங்களை எந்தப் பக்கமும் விடவில்லை. வீரப்பனிடம் எனது ஆசையைக் கூறியும். அவர் என்னிடம் நான் யானையைப் பார்க்க அனுமதித்தால் அது மிதித்துக் கொல்லும் அபாயம்உள்ளதாகத் தெரிவித்தார்.
அவ்வப்போது என் மனைவி, மகன்கள் ஆகியோர் ரேடியோ மூலம் விடுத்த செய்திகளைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இந்தமாதிரி சூழ்நிலையை எதிர்கொண்டு, மீண்டு வருவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை.
மேலும் காட்டில் நான் தனிமைப் படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன். எனது வேதனைகள், சங்கடங்களை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாதது போல்உணர்ந்தேன். மிகவும் அவதிப்பட்டேன்.
குடும்பத்துடன் இணைந்தேன்:
இப்போது நான் என் குடும்பத்துடன் இணைந்து விட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது ரசிகர்கள் நான் திரும்பி வந்து விட்டதுகுறித்து தெரிந்ததும் அதை அவர்கள் தீபாவளி போல் கொண்டாடினர். அது என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது என்று தனது பேட்டியில் கூறியிருந்தார்ராஜ்குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications