ஒத்திகைக்காக ஒரு தீ விபத்து
கோவை:
கோவை விமான நிலையத்தில் பெட்ரோல் சேமிப்பு பிரிவில் ஏற்பட்ட ""திடீர் தீ விபத்தால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தீயணைப்புபடையினர், மற்றும் கோவை நகரப் போலீசார் விரைந்து சென்று பெரும் வருத்தத்துடன் திரும்பி வந்தனர்.
கோவை விமான நிலையத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விமான எரி பொருள் சேமிப்புக் கிடங்கு ஒன்றை நிறுவியுள்ளது. கோவை வரும்விமானங்களுக்கு இந்த பெட்ரோல் பங்க்கிலிருந்து எரிபொருள் நிரப்பப்படும்.
இந்த எரி பொருள் டேங்க் அருகே திடீரென பெரும் புகை கிளம்பியது. இதையடுத்து ஊழியர்கள், அவசரமாக கோவை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன், உஷரான தீயணைப்பு படையினரின் 6 லாரிகள் உச்சக் கட்ட நிலையில் தயாரானது.
இந்த தண்ணீர் நிரப்பபட்ட இந்த லாரிகள் வேகமாக விமான நிலையம் நோக்கிச் சென்றன. விமான நிலையத்தை அடைந்ததும், தீப்பிடித்த இடத்தைக்காட்டுமாறு கோரினர். அப்போது புகை வந்து இடத்தை ஊழியர்கள் காட்டினர். அங்கு லேசாகப் புகை வந்து கொண்டிருப்பதையும் தீயணைப்பு படையினர் தண்ணீரைஊற்றி அணைத்தனர்.
பின்னர், பெரும் ஆர்வத்துடன் வந்த தீயணைப்பு ஊழியர்கள், இந்த தீயை அணைக்க எதற்காக தீயணைப்பு படையினர் அழைத்தீர்கள் என விளக்கம் கேட்டனர்.
அப்போது, அங்கு கோவை மாநகரப் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர். அவர்களும் எங்கே தீப் பிடித்தது? ஏன் அழைத்தீர்கள், எனக் கேட்டனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை நடத்தியது தெரிய வந்தது.இந்த ஒத்திகையால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் எவ்வளவு நேரத்தில் உதவிக்கு வருவர் என்பதை அறிவதற்காகவே இந்த ஒத்திகை நடத்தியதாகஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்ற ஒத்திகைகள் சென்னை விமான நிலையத்திலும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, எப்போதும் கோவை நகரில் "ஹைஅலர்ட்டில் இருக்கும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் வருத்தத்துடன் திரும்பினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications