ஜாதிக் கட்சிகளுக்கு இடமில்லை
கரூர்:
ஜாதிக் கட்சிகளுக்கு இடமில்லை, இக்கட்சிகளுடன் யாரும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என பா.ஜ.தலைவர் கிருபாநிதி தெரிவித்தார்.
தாமரை ரத யாத்திரை நடத்திய டாக்டர் கிருபாநிதி, கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜாதிக் கட்சிகளுக்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் பெருகி வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்குஎந்தக் கூட்டணியிலும் இடம் தரக் கூடாது. எங்கள் கூட்டணியில் இடம் இல்லை.
மூன்றாவது அணி அமைப்பது குறித்து மூப்பனார் தெளிவான நிலையில் இல்லை. ஒரு நாளைக்கு மூன்றாவது அணி வேண்டும் என்கிறார். இன்னொரு நாள்வேண்டாம் என்கிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி உண்டா இல்லையா என்பதிலும் குழப்பமே நீடிக்கிறது. அவரது நிலையைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஜம் காஷ்மீரில் சண்டை நிறுத்தம் குறித்து சங்கராச் சாரியார் விமர்சனம் செய்துள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. வாஜ்பாயின் பரந்த மனப்பான்மைஉலகுக்கே தெரியும். மேலும், சண்டை நிறுத்தம் பற்றி இந்திய மக்கள் அனைவரும் அறிவர்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தல் வரும்போது டிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆட்சி அமைப்பது பா.ஜ.,வின் இலக்கு அல்ல. மக்களே ஆட்சிஅமைக்க அழைக்க வேண்டும்.
எரி பொருள் விலை ஏற்றம் அல்ல. இது மானியக் குறைப்பு மட்டுமே. கடன் வாங்கி மானியமாகக் கொடுப்பதில் பலனில்லை.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால், எதிர்காலம் வளமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை தமிழக பா.ஜ.வின்தாமரை ரத யாத்திரை 8, 500 கிலோ மீட்டர்களைக் கடந்து விட்டது.
தமிழகக் கோயில் நிர்வாகிகள் தெய்வபக்தி உள்ள சான்றோர்களிடம் அளிக்க வேண்டும். கோயில்களை சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இது குறித்துமத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications