2 வது திருமணத்திற்காக மகனைக் கொன்ற அப்பா

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

தனது இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மகனை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் புவனேஸ்வரிலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்கூர்முன்டா என்ற சிறிய கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு வாழ்பவர்கள்பெருபாலும் மலைச் சாதி மக்களே. அங்குள்ள மொத்த மக்கள் தொகையும் 1,000மே ஆகும்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

பிடியாதர் என்ஜா (26) 7 வருடம் குடும்பம் நடத்திய பின் தன் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் இருந்தார். என்ஜாஇரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக பல பெண்களை பார்த்து வந்தார்.

அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த பெண்கள் எல்லோரும் அவர் மகன் அவருடன் இருப்பதை விரும்பவில்லை. இதனால் அவரது இரண்டாம்திருமணம் நடை பெறாமல் இருந்தது.

தன் திருமணத்திற்கு தன் மகனே தடையாக இருப்பதால் கோபமடைந்த என்ஜா நவம்பர் மாதம் 24-ம் தேதி இரவு தன் மகன் தூங்கிக் கொண்டிருந்தபோது கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தன் மகனை கொலை செய்தார்.

இந்த விஷயத்தை என்ஜாவின் தாயார் கிராமத்தாரிடம் தெரிவித்தார். கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். நாங்கள் அவரை கைது செய்து நீதிபதி முன்ஆஜர் படுத்தினோம். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர் தன் மகனை தாக்க பயன்படுத்திய ஆயுதத்தையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

கொலை செய்யப்பட்ட பையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்,எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+