நரக வேதனையை அனுபவித்த நாகப்பா
தார்வார்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் இருந்த போது நரக வேதனையை அனுபவித்தேன் என்று நாகப்பா கூறினார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி, நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினார். பின்னர் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்துஅவர் நவம்பர் மாதம் மீட்கப்பட்டார்.
ஆனால் ராஜ்குமார் மீட்கப்படுவதற்கு முன்பு, வீரப்பனால் கடத்தப்பட்டவர்களில் ஒருவரான நாகப்பா காட்டிலிருந்து தப்பித்து வந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
பின்னர் அவர் வியாழக்கிழமை கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜரானார். பின்னர் தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக கர்நாடக மாநிலம் தார்வார்மாவட்டம் மரதகிக்கு வந்தார்.
அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், வீரப்பனிடம் நான் பணய கைதியாக இருந்தபோது நரக வேதனை எப்படி இருக்கும் என்பதை அனுபவப் பூர்வமாகஉணர்ந்தேன். எப்போது விடுதலை அடைவோம் என்று காத்திருந்தேன்.
அவ்வளவு சீக்கிரம் விடுதலையடைய முடியாது என்ற தெரிந்தவுடன் அங்கிருந்து நைசாகத் தப்பித்து ஓடி வந்து விட்டேன். இது எனக்கு மறுபிறவி போல்உள்ளது.
இது நாள் வரை நான் வீட்டுக் காவலில் இருந்ததாகச் சொல்வது தவறு. காட்டில் இருந்து வந்த பிறகு உடல் நலம் இல்லாததால் ஓய்வு எடுத்துவந்தேன்.
சந்தன வீரப்பனைப் பிடிக்காமல் விடக் கூடாது. என்ன விலை கொடுத்தாவது அவனுடைய நட வடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். வீரப்பனைஉயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி அவனைப் பிடிக்க வேண்டும் என்றார் நாகப்பா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications