அகதிகள் போர்வையில் நுழைந்த விடுதலைப்புலி?
சென்னை:
அகதிகள் என்கிற பெயரில் தமிழகத்தில் ஊடுறுவிய புலி ஒருவருக்கு முதுகில் குண்டு காயம் இருக்கலாம் என்று கருதி சிகிச்சைக்காக ராமநாதபுரம்அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டைக்குப் பயந்து ஏராளமான இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.
இப்படி வரும் அகதிகளில் பொரும்பாலோனோர் மர்ம படகுகளில் ஏறி ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் வந்து கரையிறங்குகின்றனர்.
கடந்த 22-ம் தேதி இலங்கையில் இருந்து 2 படகுகளில் புறப்பட்ட எட்டு பெண்கள் உள்பட 25 அகதிகள் 23-ம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம்வந்தனர்.
இவர்கள் ராமேஸ்வரத்தில் போலீஸார் விசாரணைக்கு பின்னர் 25-ம் தேதி மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறப்பு விசாரணை முகாமில்அடைக்கப்பட்டனர். மத்திய , மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் இந்த அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கிளிநொச்சி மாவட்டம் வட்டகச்சியை சேர்ந்த கவுதம சீலன் வயது 27. என்பவர் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி குண்டடிபட்ட நிலையில் தமிழகம்வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் அவரது முதுகில் குண்டு உள் புகுந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை செய்த பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. மருத்துவமனையில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications