ஈரோட்டில் முருக பக்தர்கள் மாநாடு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கோயில்களை அரசிடம் இருந்து மீட்டு தனி வாரியம் அமைத்துப் பராமரிக்க வேண்டும் எனக் கோரி ஈரோட்டில் வரும் டிசம்பர் 24ம் தேதி ஆறுமாவட்ட முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது.

இது குறித்து மாநில முருக பக்தர்கள் பேரவை தலைவர் குமரகுருபர சுவாமிகள் தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு மிகவும் சிரமமான நிலையே நிலவி வருகிறது. கோயில்கள் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கோயில் பராமரிப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்ட சூழ்நிலை உருவாகி வருகிறது.

குறுப்பாக பழனியில் சில குறைபாடுகள் பக்தர்களின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் பக்தர்கள் சிரமத்துடன் எடுத்துவரும் கொடுடி நீரை முருகனின் பாதத்தில் கூட ஊற்ற மறுக்கின்றனர். அதை அலட்சியாக அருகில் கொட்டி விடுவது வேதனை தருவதாக அமைகிறது.

இது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம். பல கோயில்களில் அர்ச்சனை டோக்கன், சிறப்பு வழி,போன்ற கெடு பிடி வசூல் மட்டுமே நடந்து வருகிறது.

பண வசூலில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. எந்த அடிப்படை தகுதியும் இல்லாதவர்கள்கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதை மாற்றி ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்களை அரசு நியமிக்க வேண்டும்.

கோயில் உண்டியல் வருமானத்தை சமுதாயத்திற்குப் பயன்படுத்தும் வகையில் செலவு செய்ய வேண்டும். அரசிடமிருந்து கோயில்களைப் பிரித்து தனி வாரியம்அமைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய ஆறுமாவட்ட பக்தர்கள் பங்கேற்கும் மாநாடு ஈரோட்டில் வரும் டிசம்பர்24ம் தேதி நடக்கிறது.

இதில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+