வீரப்பன்: ஜார்ஜ் கருத்துக்கு கிருஷ்ணா பதில் கூற மறுப்பு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பத் தயார் என்று கூறியிருப்பது அதிருப்தி அளிக்கிறது என்று ஜார்ஜ் பெர்னான்டஸ்கூறியது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கூற மறுத்து விட்டார்.
வீரப்பன் என்ற தனி மனிதனைப் பிடிப்பதற்காக மத்திய எல்லை பாதுகாப்பு படையினரை அனுப்பத் தயார் என்று மத்திய அரசு கூறியிருப்பது தவறு என்றுமத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கூறியதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தது. இது குறித்து கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, நானும் ஜார்ஜ் பெர்னான்டஸ் பேட்டி குறித்துப் படித்தேன்.
அவர் எதற்காக அப்படிக் கூறினார்? எந்த சூழ்நிலையில் அப்படிக் கூறினார்? என்று தெரியவில்லை. இருப்பினும் வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக, கர்நாடகஅரசுகள் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றன. அதிரடிப்படையினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் பெர்னான்டஸ் நிருபர்களிடம் கூறுகையில் வீரப்பன் என்பவர் தனிமனிதர்.
அவரைப் பிடிப்பது போலீஸாரின் கடமை. அதற்கு மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையையோ அல்லது வீரப்பனை ஹெலிக்காப்டர் மூலம் தேட உதவிசெய்யவோ தேவையில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications