டிச.6ல் இந்திய தேசிய லீக் போராட்டம்
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் 6-ம் தேதி போராட்டம் நடத்தப் படும் என்றுஅப்துல் லத்தீப் அறிவித்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் எம்.ஏ.லத்தீப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1992 - டிசம்பர் ஆறாம் நாள் பாபர் மசூதி உடைத்து தரை மட்டமாக்கப்பட்டது. டிசம்பர் ஆறாம் நாள் கோரிக்கைதினமாகவும், கண்டன நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வருகின்ற 6-ம் தேதி காலை பத்து மணிக்கு இந்திய தேசிய லீக் தன்னுடைய ஜனநாயக கடமையை நி றைவேற்றும்வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே தொடர் போராட்டம் அமைதியான அறவழியில்தொடங்கும்.
இப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய தேசிய லீக் கேட்டுக் கொள்கிறது. பாபர்மசூதி இடத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்து சட்டபூர்வமான ஆட்சிமுறைக்கு ஊனம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசமைப்புச் சட்ட அமைப்புகளை தகர்த்து எறியும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். நாட்டில் நல்லிணக்கம்பல்வேறு சமுதாயங்களுக்கிடையே அணுக்கம் ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சாதி வெறி- மத வெறி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோஷங்களை தான் எழுப்ப வேண்டும்என அனைவரையும் இந்திய தேசிய லீக் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.
தொடர் முழக்க போராட்டத்தில் தோழமை கட்சித் தலைவர்கள் மூப்பனார், அ.தி.மு.க சார்பில் லியாவூதின் சேட்,சங்கரய்யா, நல்லகண்ணு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டுபேசுகிறார்கள். இவ்வாறு அப்துல் லத்தீப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications