தமிழக அணி தலைவராக ராபின் சிங் நியமனம்
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ராபின் சிங், சுப்பையா பிள்ளை ஒரு நாள்கிரிக்கெட் தொடரில் த்மிழக அணியில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த ராபின் சிங் தற்போது ஜிம்பாப்வேயுடன் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெறவில்லை.
ராபின்சிங் தமிழக ரஞ்சிக் கோப்பை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிந்தார். அவர் இந்த மாதம் 5-ம் தேதிதொடங்கி 11-ம் தேதி வரை சுப்பையா பிள்ளை கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கும் தமிழகஅணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள தமிழக அணி வீரர்களின் பெயர்கள்:
ராபின் சிங் (அணித் தலைவர்), சடகோபன் ரமேஷ், எஸ் மகேஷ், ஹேமந்த் குமார், டி. குமரன், ரஜத் பாஷியா,ஆஷிஸ் கபூர், ரூபன் பால் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீநிவாஸ், சதீஷ். பாலாஜி ராவ், பத்ரிநாத், மதனகோபால், எல்பாலாஜி, வசந்த் சரவணன்.
அணியின் பயிற்சியாளராக பரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
