நாளை கூடுகிறது புதுவை சட்டசபை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது.
பாண்டிச்சேரியில் ஆளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து மனோகர் தலைமையிலான ஒரு குழு பிரிந்ததையடுத்து கூடும் முதல் குளிர்காலக் கூட்டத்தொடராகும் இது.
இதையடுத்து, மனோகர் தலைமையிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் சுப்ரமணியத்திடம் தங்களுக்கு தனி இருக்கைகளைஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதுவையில் புயலால் ஏற்பட்ட சேதம், சமீபத்தில் முதல்வர் சண்முகம் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு, விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புஇருக்கிறது என்று அமைச்சர் கண்ணன் கூறியது ஆகியவை குறித்து சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications