காதல் ஜோடியின் கம்ப்யூட்டர் கலாட்டா
கும்பகோணம்:
காதல் ஜோடி நடத்திய கம்யூட்டர் விளையாட்டால் வாக்காளர் அடையாள அட்டையில் முட்டாள் என்ற வார்த்தை இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கவிதா (23). இவர் முதுகலை பட்டதாரி. இவர் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிய போது அதில் கவிதா ஒருமுட்டாள் என்று அச்சாகியிருந்தது.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தார். விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த காதல் ஜோடியின் கம்ப்யூட்டர்விளையாட்டுத்தான் என்று தெரிய வந்தது.
சென்னையைச் சேர்ந்த அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் ஜேம்ஸ் என்பவரும், கவிதா என்பவரும் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பாதியிலேயே முறிந்தது.
இதையடுத்து கவிதா மேல் ஜேம்சுக்குக் கோபம் ஏற்பட்டது. அவர் வாக்காளர் அடையாள அட்டையில் கவிதா பெயர் வரும்போதெல்லாம் அதில்கவிதா ஒரு முட்டாள் என்று அச்சடித்தார். கும்பகோணம் கவிதாவின் அடையாள அட்டையிலும் இதே போல் முட்டாள் என்ற வார்த்தைஅச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்த விஷயம் தெரிய வந்ததும் கவிதாவும், சளைக்காமல் அடையாள அட்டைகளில் ஜேம்ஸ் பெயர் வந்த போதெல்லாம் ஜேம்ஸ் ஒரு முட்டாள் என்றுஅச்சடித்தார்.
இருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு பழி வாங்கும் அத்தியாயத்தை நடத்தி முடித்து அப்பாவி பொதுமக்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி விட்டனர்.
ஆனால் இந்தக் குளறுபடி முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் கும்பகோணம் கவிதாவின் அடையாள அட்டையில்மட்டும் கவிதா ஒரு முட்டாள் என்ற வார்த்தை அழிக்கப்படாமல் இருந்தது. தலைமறைவாகி விட்ட இருவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications