தமிழகத்தில் தபால் சேவை கடும் பாதிப்பு
சென்னை:
தல்வார் கமிட்டியின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு மற்றும் தற்காலிக ஊழியர்களைநிரந்தரம் செய்வது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் தபால் நிலையங்கள்இயங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் தபால் சேவை கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
சென்னை பொது தபால் நிலைய முதல் நிலை போஸ்ட் மாஸ்டர் வத்சலா ரகுகூறுகையில், 10 சதவீத ஊழியர்களே வேலைக்கு வந்திருந்தனர். பெரும்பாலானோர்அலுவலகம் வருவதைப் புறக்கணித்தனர். 139 தபால் நிலையங்கள், 22 ஆர்எம்எஸ்நிலையங்கள் சொற்ப ஊழியர்களுடனேயே காட்சியளித்தது.
விரைவுத் தபால், தபால் பட்டுவாடா ஆகிய தபால் பணிகள் மட்டுமே நடந்தன. பலதொழிற்சங்கங்கள் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்சென்னை மற்றும் அதன் புறநகரங்களில் தபால் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தபால் நிலைய நான்காம் நிலை ஊழியர்கள், பாதுகாவலர்கள் மட்டுமே வேலைக்குவந்திருந்தனர். இதனால், தபால் பட்டுவாடா, இன்லன்ட் மற்றும் ஸ்டாம்புகள் விற்பனைஆகியவை மட்டும் நடந்தன என்றார்.
மதுரையில் தபால் பணிகள் ஸ்தம்பிப்பு:
மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் தவிர பிற தபால் நிலையங்கள்மூடியே இருந்தன. தல்லாகுளம் தபால் நிலையத்தில் ஒரு பெண் மற்றும் ஸ்டாம்விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
தலைமைத் தபால் நிலையம் முன்பு 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியில் தபால் சேவை பாதிப்பு:
தபால் ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்பாண்டிச்சேரி தபால் சேவைகள் ஸ்தம்பத்தன.
5 வது ஊதியக் கமிஷன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், வேறுபல கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் அவர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, திங்கள்கிழமை மாலை தபால் ஊழியர்கள் பாண்டிச்சேரியில் உள்ளபொதுத் தபால் நிலையம் அருகே ஊர்வலமாகச் சென்று தங்கள் போராட்டத்தைத்தொடங்கினர்.
பாண்டிச்சேரியில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் தபால் தேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications