உலர்பழங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை
டெல்லி:
உலர் பழங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
கடந்த 3 வருடங்களில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு அதிக அளவு உலர்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
1997 - 98 ம் வருடங்களில் 1454.07 கோடி உலர் பழங்கள் ஏற்றுமதி யாகியுள்ளன.
அதே போல் 1999-2000 வருடங்களில் 2488.68 கோடிக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் ஏற்றுமதி 71 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
1997 ம் வருடம் முதல் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது 17சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
1997-98 ம் வருடங்களில் உலர் பழங்கள் ஏற்றுமதி 1.454.07 கோடியாக இருந்தது.98-99 ம் வருடங்களில் 1699.80 கோடியாக இருந்தது. 99-2000 மாவது வருடத்தில்ஏற்றுமதி 2488.68 கோடியைத் தொட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு மற்றும் ரெய்சின்ஸ் போன்றஉலர்பழங்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
வெளிநாடுகளுக்குக் குறிப்பாக, சவுதி அரேபியா, க்ரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி,ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், ஹாங்காங், ஐக்கிய அரபு நாடுகள்,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications