இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதலிடம்
லின்கன்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
நியூசிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடை பெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இது வரை நடந்த 3போட்டிகளிலும் இந்தியா வென்று முன்னணி வகிக்கிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியினர் திங்கள் கிழமை இங்கிலாந்து அணியுடன் மோதினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே இந்திய அணியினரால் எடுக்க முடிந்தது.
இந்திய அணியின் சார்பில் சந்திரகாந்தா 45 ரன்களும், மைதிலி 32 ரன்களும், ரூபாஞ்சலி 29 ரன்களும் எடுத்தனர்.
156 ரன்களை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணியினர் களமிறங்கினர். ஆனால் இந்திய அணியினரின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல்திணறினர்.
49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியினர் தோல்வியைத் தழுவினர். இந்திய அணி 8 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் ரூபாஞ்சலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபா, சுமிதாவும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் இந்தியா 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவும் 6 புள்ளிகள் பெற்றுமுதலிடத்தில் உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications