டிச.24 ல் ஈரோட்டில் கவுண்டர் பேரவை மாநாடு
ஈரோடு:
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் 5 வது மாநில மாநாடும், கொங்கு மக்கள் கட்சியின் முதல் மாநாடும்டிசம்பர் 24ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது.
இது குறித்து கொங்கு மக்கள் கட்சி மற்றும் கவுண்டர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பொதுச் செயலர் ஏ.எம் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொங்கு வேளாளக் கவுண்டர்களின் மாநாடு டிசம்பர் 24ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்குமுன்னதாக பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பேரணி ஈரோடு வ. உ.சி பூங்காவில் தொடங்கி, சோலார் பிரிவு வரை நடக்கவுள்ளது. கொங்கு நாட்டுப்பகுதியில் எங்களது கட்சிக்கு 20 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.
கொங்கு வேளாளாக் கவுண்டர்களின் குலத் தாழிலாளாக விவசாயம் விளங்கி வருகிறது. இந்த தொழிலில்முக்கியத்துவம் வாய்ந்தவற்றில் மஞ்சளும், பயிர்களின் பசுமையும் தான். எனவே மஞ்சள், பச்சை வண்ணத்தில்கொடி அமைத்துள்ளோம்.
எங்கள் கட்சி மாநாட்டில் அனைத்து பிரிவு மக்களின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழக ராஜிவ்காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, யாதவர் பேரவைத் தலைவர் கோபால கிருஷ்ணன், புதியநீதிக் கட்சியின் தலைவர் சுத்தநாதனந்தன், வெள்ளாளச் செட்டியார் சங்கத் தலைவர் முருகேசன், முன்னாள்அமைச்சர் கண்ணப்பன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
இந்த செயற்குழுக் கூட்டத்தில், தேவராஜ், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications