குஜராத்தில் உண்ணாவிரதம் இருந்த எஸ்ரா சற்குணம்
சென்னை:
குஜராத் மாநிலத்தில் உண்ணாவிரதம் இருந்த பேராயர் எஸ்ரா சற்குணம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் சிந்தியா என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை சிலர் இந்து கோவிலாக மாற்றியதாகவும், அதை மீண்டும் கிறிஸ்தவ ஆலயமாகமாற்றக் கோரி பேராயர் எஸ்ரா சற்குணம் உண்ணாவிரதம் இருந்தார்.
பிரச்சனைக்குரிய இடத்தில் தொடர்ந்து 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எஸ்ரா சற்குணத்துடன் இருந்தபாதிரியார்களையும், மற்றவர்களையும் போலீஸார் விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு சென்னையில் உள்ள இவாஞ்சலிகல் சர்ச் பிஷப்பின் பிரதிநிதி டாக்டர் சுந்தர்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேராயர் எஸ்ரா சற்குணத்தைவிடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications