தமிழ் தீவிரவாதிகளுக்கு தடை கோரும் ஜெயா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வெவ்வேறு குரல்களில் பேசி வருகின்றன.

கடத்தல் நாடகம்:

ராஜ்குமார் கடத்தல், விடுதலை நாடகத்திற்குப் பின்னர் இந்த முரண்பாடுகள் மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றன.

நெடுமாறன், கொளத்தூர் மணி, மற்றும் பானு உள்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரின் முயற்சிகளால் தான் ராஜ்குமார் விடுதலைசெய்யப்பட்டார் என்பதில் இன்றைக்கு யாருக்கும் எள்ளவும் சந்தேகம் கிடையாது.

எப்பொழுதுமே விடுதலைப் புலிகள் மீது அதிக பரிவு கொண்டவரான மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டதில் பெரும்பங்கு வகித்தார் என்பதில் ஐயம் இல்லை.

ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கும் அதே நேரத்தில், அவரது விடுதலையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் பெருமளவில்ஈடுபட்டிருப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

ஜார்ஜ் பெர்னான்டஸ்:

டாக்டர் ராஜ்குமார் விடுதலையில் பெரும் பங்கு வகித்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இன்று இந்திய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக மிகப்பெரிய பொறுப்பில்இருக்கிறார். இருந்தாலும் அவரது தேசப்பற்று சந்தேகத்திற்குரியதாகும்.

ஓராண்டுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் சுமந்து சென்ற கப்பலை இந்தியக்கடல் எல்லை வழியாகச் செல்லஅனுமதித்தவர் இதே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்தான்.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை சுமந்து சென்ற இன்னொரு கப்பலைத் தடுக்க முயற்சி செய்யதற்காக மிக உயர்ந்த பதவி வகித்த இந்திய கடற்படைஅதிகாரி ஒருவர் தனது பதவியையே இழக்க நேரிட்டது.

வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள் ராஜ்குமார் சத்ய மங்கலம் காடுகளில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பொழுது, மத்திய அரசு இதில்தலையிட வேண்டும் என்றும், மத்திய படைகளை அனுப்பி வீரப்னை பிடிக்கவும், ராஜ்குமாரை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்றும் தொடர்ந்து பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

அப்பொழுதெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் கேட்டுக்கொண்டால் தேவையானஉதவிகளை மத்திய அரசு அளிக்கும் என்று பல முறை தெரிவித்தார்.

ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட பிறகு கர்நாடக மாநில அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உதவியை நாட வேண்டியகட்டாயம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக வீரப்பனை தேடிப்பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகம் எல்லைப்பாதுகாப்புப்படையை அனுப்ப சம்மதித்தது.

இந்தக் கூட்டத்தில் தீடீரென்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இது மாநில காவல் துறை ஆற்ற வேண்டிய கடமை என்றும், மத்தியபடைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சத்யமங்கலம் காட்டுப்பகுதிக்கு எல்லைப் பாதுகாப்புப்படை அனுப்பப்படுவதை ஜார்ஜ் பெர்ணான்டஸ் எதிர்க்கிறார்.

மாநில அரசின் காவல் துறை மட்டுமே வீரப்பனை தேடிப்பிடிப்பதில் ஈடுபடுத்தப்பட்டால் பத்திரமாக புதைந்தே கிடைக்கக் கூடிய விரும்பத்தகாத தர்மசங்கடமான பல உண்மைகள், எல்லைப் பாதுகாப்புப் படை சென்றால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்று ஜார்ஜ் பெர்ணான்டஸ் அச்சப்படுகிறாரா?

எல்லைப் பாதுகாப்பு படையை அனுப்பக் கூடாது என்று ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறும் பொழுது, அவர் தனது சார்பில் இதைக் கூறுகிறாரா? பா.ஜ.க.தலைமையிலான மத்திய கூட்டணி அரசின் சார்பில் இதைக் கூறுகிறரா?

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப்போலவே, தமிழர் விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்புப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளையும் மத்திய அரசு உடனடியாகதடை செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+