பிரதமருக்கு முரசொலி மாறன் கண்டனக் கடிதம்
சென்னை:
எம்.பிக்கள் தொகுதி எண்ணிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கடிதம்எழுதியிருக்கிறார்.
பிரதமர் வாஜ்பாய்க்கு முரசொலி மாறன் எழுதியுள்ள கடிதத்தில், பாராளுமன்றதொகுதிகளின் எண்ணிக்கையில் 2026 - ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் இல்லைஎன்ற நிலையில் இருந்து விலகி
2011- ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் இருக்காது என்றும் இப்பொழுது இருக்கும்நிலையே 2011-ம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்றும் மத்திய அரசு பரிசீலித்துவருவதாகத்தெரிகிறது.
இந்த முடிவு தென் மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நலனை வெகுவாகபாதிக்கும். குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக தமிழ்நாடு அல்படுத்திவருகிறது.
இதனால் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் அரசுக்கு அவப்பெயர் தான் ஏற்படும்.
ஏற்கனவே, கடந்த 1974-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் 50 ஆண்டுகளுக்குபாராளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்று எதிர் கட்சிசார்பில் தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
அதை அப்பொழுதைய ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.
பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026 -ம் ஆண்டு வரை மாற்றம்இல்லை என்ற முடிவை மாற்ற வேண்டாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிபிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும்நினைவுபடுத்த விரும்புகிறோம்.
2011-ம் ஆண்டிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றிஅமைக்கும் முடிவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மத்திய அரசு இதை நிராகரித்தால் அது ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாககஇருக்கும். வடக்கு- தெற்கு என்ற பாகுபாட்டையும் உருவாக்கிவிடும்.
எனவே தேசிய நலன் கருதி மத்திய அமைச்சரவையின் முடிவிலும், அனைத்துக்கட்சிகளின் உடன் பாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய அமைச்சர் மாறன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications