விரைவில் எண்ணெய் விலை குறையும் உலக வங்கி அறிக்கை
வாஷிங்டன்:
எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இரு ஆண்டுகளில் எண்ணெய் விலைகுறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வளரும் நாடுகளின் பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்த உலக வங்கியின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகம் முழுவதும் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வளகும் நாடுகள்பாதிப்படைந்துள்ளன. இந்த நிலை தொடராது. ஓரிரு ஆண்டுகளில் சர்வதேச அளவில் எண்ணெய் விலை மூன்றில்இரண்டு மடங்காக குறைந்துவிடும்.
சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளுக்குத்தான் எண்ணெய் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வளரும்நாடுகளில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
தற்போது ஒரு பேரல் எண்ணெய் விலை ரூ 1,300 ஆக இருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ 1,150 ஆகவும், இன்னும்சில ஆண்டுகளில் ரூ 966 ஆகவும் விலை குறையும் வாய்ப்புகள் உள்ளது. எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் ஒருபேரல் எண்ணெயின் விலை ரூ 874 அளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications