ஐ.சி.சி. அதிகாரிகளை சந்திக்க பிரபாகர் மறுப்பு
டெல்லி:
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக விசராணை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ( ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு குழுவினரை சந்திக்க மனோஜ் பிரபாகர்மறுததுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மனோஜ் பிரபாகர்தான் என கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு சூதாட்ட ஏஜென்டுகளை அறிமுகம் செய்து வைத்தவரும் பிரபாரகர்தான் எனவும் தெரிய வந்தது. இதற்காகஅவர் கமிஷன் பெற்று வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
7 பேர் குழு:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவு, சர்வ தேச கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்திவருகிறது. இது குறித்து பிரபாகரிடம் விசாரணை நடத்துவதற்காக மார்டின் ஹாகின்ஸ், ஆலன் பீக்காக், ராபர்ட் சுமான்னி அடங்கிய 3 பேர் கொண்ட குழுடெல்லி வந்தனர்.
இவர்கள் பிரபாகர் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரலாம் என கேட்டனர். பிரபாகர் அவகர்களைசந்திக்க மறுத்துவிட்டார்.
பிரபாகர் இது குறித்து கூறுகையில், ஐ.சி.சி அதிகாரிகள் என்னோடு தொலைபேசியில் பேசிய போது நான் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் தான்அவர்களை சந்திப்பேன் என கூறினேன். நான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலளிக்க கடமைப்பட்டவனே தவிர ஐ.சி.சி.க்கு அல்ல என்றார்.
ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழுவின் ஹக்கினஸ் கூறியதாவது:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் சேகரிக்க நாங்கள் வந்திருக்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடத்தியஅதிகாரிகளையும், ஊழலில் சம்பந்தப்பட்டவர்களையும் சந்திக்க இருக்கிறோம்.
சி.பி.ஐ. இணை இயக்குநர் சவானி தலைமையிலான அதிகாரிகள் குழுவினரை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினோம் என்றார். இவர்கள்அஜய்ஷர்மாவிடமும் விசாரணை நடத்தவிருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications