ராஜினாமாவை வாபஸ் பெற்றார் மம்தா
டெல்லி:
பஞ்சாபில் நடந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தனதுபதவியை ராாஜினாமா செய்திருந்தார். பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டதின் படி தனது ராஜினாமாவை வாபஸ்பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் சராய் பஞ்சாரா அருகே சனிக்கிழமை தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயில் மீது ஹவுரா மெயில்மோதி விபத்துக்குள்ளானது. இநத் விபத்தில் 43 பேர் இறந்தனர். 145 பேர் காயமடைந்தனர்.
இந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து மம்தா பானர்ஜிதனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரதமர் மம்தாவின் ராஜினாவை ஏற்கமறுத்துவிட்டார்.
பிரதமர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தில், மம்தா பானர்ஜி தனது ராஜினாமா வை திரும்பப் பெறவேண்டும்.
ரயில்வே துறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அனைத்துமுயற்சிகளுக்கும் மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என கூறியிருந்தார்.
பிரதமரின் கடிதத்தை ஏற்றுக் கொண்டு ராஜினாவை திரும்ப பெற்ற மம்தா தெரிவித்தாவது:
பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப எனது ராஜினாவை வாபஸ் பெறுகிறேன். ரயில்வேயில் பாதுகாப்பை பலப்படுத்தஅனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வேன். அது குறித்து பிரதமருடன் கலந்து பேசுவேன். ரயில்வே துறையில்எங்கு எந்த விதமான குறைகள் இருந்தாலும் அதை நீக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் என் துறையில் அதிக கவனம் செலுத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படாதுஎன்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications