செங்கோட்டையன் மீதான வழக்கில் இறுதி வாதம் தொடக்கம்
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில் இறுதி வாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அண்ணா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்செவ்வாய்கிழமை முதல் வக்கீல்களின் இறுதி வாதம் தொடங்கியது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளதாக அரசுதரப்பு வக்கீல்கள் நிருபித்துள்ளதாக கூறினர். தனது வாதத்தில் அரசு தரப்பு வக்கீல் ராமசாமி தெரிவித்ததாவது:
அண்ணா போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பணியாறிய பரமசிவத்துடன் சேர்ந்து அண்ணாபோக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள், பாடிகிட்டுகள் வாங்குவதிலும், டிக்கெட்டுகள்அச்சிடுதலிலும் முறை கேடுகள் செய்துள்ளனர்.
சப்ளை ஆர்டர்கள் கொடுக்க கமிஷன்கள் பெற்றுள்ளனர். இவை அனைத்தும் பல்வேறு அரசு சாட்சிங்கள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது. கமிஷன் தொகைகள் மூன்றாவது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கோபி நடராஜன்முலம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிர்வாக இயக்குனர் பரமசிவம் தொலைபேசி மூலம் சப்ளையர்களிடம் மூலம் பேசியதற்கானஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வாறு கமிஷன் பெற்றனர் என்பவைசாட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முதல் எதிரி செங்கோட்டையனும், இரண்டாவது எதிரி எழிலும் பொது ஊழியர்களாக இருந்து தங்கள்அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லாபம் சம்பாதித்துள்ளனர். இவை அரசு தரப்பு சாட்சிகள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப சூழ்நிலையையும், சாட்சிகளையும் வைத்து பார்க்கும் போது செங்கோட்டையன், எழில், கோபி நடராஜன்ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பினரால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணா போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக இருந்த பரமசிவம் தற்போது உயிருடன் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications