ராமதாஸ், நெடுமாறனுக்கு இந்து முன்னணி கண்டனம்
கோவை:
தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது, இது குறித்துஅரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணியின் அமைப்பாளர் ராமகோபாலன்தெரிவித்துள்ளார்.
பாரதியார் பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி என்ற பெயரில் இந்து முன்னணி ஒரு கல்லூரியைத் துவங்கி வருகிறது.இந்தக் கல்லூரிக்கு நிதி திரட்டவும், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவும் இந்து முன்னணி அமைப்பாளர்ராமகோபாலன் வந்திருந்தார். அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் சிலர் பிரிவினைவாதத்தை ஆதரித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் நடத்தவிருக்கும் மாநாட்டில்தனித் தமிழ்நாடு கோரிக்கை எழும். தை மாதத்தை தமிழ் மாதங்களில் முதல் மாதமாக அறிவிக்க வேண்டும் என்றகோரிக்கையும் இந்த மாநாட்டில் வைக்கப்படவுள்ளது.
இதில் ராமதாஸ், வைகோ, கிருஷ்ணசாமி,நெடுமாறன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இத்தகைய பிரிவினைவாத மாநாட்டை இந்து முன்னணி வன்மையாைகக் கண்டிக்கிறது. இத்தகைய சக்திகளுக்குஅரசு இடம் கொடுக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்து கோயில்களில் மிதியடியிலிருந்து அர்ச்சனை வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால்பக்தர்கள் கடும் மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். நூற்றுக் கணக்கான கோயில்களில் பூஜை மற்றும்வழிபாடுகள் இல்லாமல் இருக்கின்றன.
இந்து கோயில்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். திருப்பரங்குன்ற மலையின் மீது தீபம் ஏற்றஉயர்நீதிமன்றமே அனுமதியளித்துள்ளது. ஆனால், அறநிலையத் துறை அங்கு தீபம் ஏற்ற மறுக்கிறது.
மலை முழுவதும் ஆக்கிரப்பு செய்யப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இந்துக்களின் நலனில் அக்கறை காட்டும் அரசியல் கட்சிக்கு மட்டுமே இந்து முன்னணி ஆதரவளிக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications