முஸ்லீம் வழிபாட்டு மைய கோபுரம் உடைப்பு
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மைதானத்தின் கோபுரங்களை (மினார்) விஷமிகள் சேதப்படுத்தியதால்அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. ஜமா-அத் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
தமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்திலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.
ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, அங்கு அதிகாலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.சத்தியமங்கலத்தில் உள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில், ரம்ஜான் உட்பட விசேஷ பண்டிகை நாட்களில்தொழுகைகள் நடக்கும்.
இதையொட்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக இந்த மைதானத்திற்கு முஸ்லிம்கள் செல்வர். இந்தமைதானத்தில் இதற்கென மினார் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கோபுர மினார்கள் உள்ளன. இதில் இரண்டைடிசம்பர் 6ம் தேதி அதிகாலையில் விஷமிகள் உடைத்துள்ளனர்.
இந்த தகவலை காலையில் அறிந்த இப்பகுதி மக்கள், ஒன்று திரண்டனர். ஜமா-அத் தலைவர் அமனுல்லாதலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.
பின்னர், மாலையில் ஒன்று கூடி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.தாசில்தார் காதர் உசேன், டிஎஸ்பி குப்புசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதி மொழியின்பேரில்சாலை மறியல் கைவிடப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications