பின்வாங்கினார் வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தி கோயில் தொடர்பாக புதன்கிழமை தான் தெரிவித்த கருத்திலிருந்து பிரதமர் வாஜ்பாய் பின் வாங்கிவிட்டதாகத்தெரிகிறது.
இது தொடர்பாக அவரை தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அவர்களிடம் பேசிய வாஜ்பாய், தேசிய ஜனநாயக முன்னணியின் செயல் திட்டத்துக்கு மாறான பாதையில் அரசு செல்லாது எனஉறுதியளித்துள்ளாார். இத் தகவலை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. எர்ரன் நாயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.
பல கட்சிகளை அடக்கிய கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பிரதமர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் செயல் திட்டத்தில் அயோத்தி கோவில் குறித்து எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது கோயில் கட்டும் பணிஇன்னும் முடியாமலேயே உள்ளது என்ற ரீதியில் பிரதமர் பேசியது சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இப்போது வாஜ்பாய் எங்களுக்கு இந்த விஷயத்தில் உறுதிமொழி அளித்துவிட்டார். செயல்திட்டப்படி தான் செயல்படுவோம் எனஅவர் கூறினார் என்றார் நாயுடு.
முன்னதாக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில்சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு இனி பாதுகாப்பு இருக்காது என சீக்கியத் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மானும்கூறியிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications