சேலம் மேயர் மீது ரூ.3 கோடி ஊழல் புகார்
சென்னை:
ஆழ்குழாய் கிணறுகள் (போரிங்) அமைப்பதில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் முறைகேடுகள் செய்ததாகசேலம் மேயர் சூடாமணி மற்றும் துணைமேயர் சுபாஷ் ஆகியோர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஆறுவாரத்திற்குள் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புதுறைஇயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலம், வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் மூலம் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது.
சேலம் நகரில் ஆண்டுதோறும் குறைந்தது 300 ஆழ்குழாய்க் கிணறுகள் தான் அமைக்கப்படும் என்று துணை மேயர்சுபாஷ் கடந்த 1996-ம் ஆண்டு அறிவித்தார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் 200 அடிக்கு உட்பட்டே அமைக்கப்பட்டது. ஆனால் 500 அடிஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் தோண்டியதாக ரசீதுகளை காட்டியதன் மூலம் மாநகராட்சிக்கு மூன்று கோடியே 50லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மேயர் சூடாமணி, துணை மேயர் சுபாஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.எனவே போலீஸாரிடம் நான் கொடுத்த புகார் மனுவை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில்அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்திரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்கூறியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி அக்பர் பாட்ஷா காதிரி முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான ஆரம்ப கட்டவிசாரணையை தொடங்கி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும் இந்த புகார் குறித்து ஆறு வாரகாலத்திற்குள் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications